உள்நாடுவிசேட செய்திகள்

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் நாடு திரும்பினார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட திருமதி சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) உள்ளிட்ட குழுவினர் இன்று (10) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.

உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, திருமதி சமந்தா ஜோய் மோஸ்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூராய ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.

அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளின் பரஸ்பர அனுகூலங்களை வழங்கும் தற்போதுள்ள ஒத்துழைப்புத் துறைகளை விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது

மேலும், திருமதி சமந்தா ஜோய் மோஸ்டின், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டதோடு பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகமவில் அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களைப் பார்வையிட்டார்.

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் உள்ளிட்ட குழுவினரை வழியனுப்பும் நிகழ்வில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன மற்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் குழுவும் இணைந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

வாழைச்சேனை பதற்றம் கட்டுப்பாட்டுக்குள்- சிறுவன் பலி

பேருந்து கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

editor

தனியார் பேருந்துகள் மட்டு