விளையாட்டு

அவுஸ்திரேலிய அணியுடன் மோதிய இந்திய அணிக்கு திரில் வெற்றி

(UTV|COLOMBO) நேற்று இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரில்  அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 36 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

உலகக் கிண்ணத் தொடரின் 14 ஆவது போட்டியாக இந்த போட்டியில்
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 352 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 353 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 316 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

மேற்படி இந்தப் போட்டியை அடுத்து, இந்திய அணி உலகக் கிண்ணத் தொடரின் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன்  அவுஸ்திரேலிய அணி, 4 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் உள்ளது.

Related posts

மிதாலி ராஜ் சாதனை

குமார் சங்ககாரவிற்கு கிடைத்த வாய்ப்பு…

5000 ஓட்டங்களுடன் 09 வது இடத்தைப் பிடித்த மெத்திவ்ஸ்