சூடான செய்திகள் 1

அவிசாவளை – தல்துவ பகுதியில் அமைதியின்மை – பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – அவிசாவளை – தல்துவ பகுதியில் இரண்டு தரப்புக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெறும் சூழ்நிலை எழுந்துள்ளதால் அங்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பேரூந்து ஒன்றின் சிங்கள சாரதிக்கும், முச்சக்கரவண்டியொன்றின் முஸ்லிம் சாரதிக்கும் இடையில் கடந்த வாரம் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இன்று(02) காலை மோதலாக மாறியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

குறித்த தாக்குதலில், பேரூந்து சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தி நாபல பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன், அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு

CID இல் ஆஜரான நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor

உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பம்