உள்நாடு

அவசர பராமரிப்பு வேலை – 18 மணிநேர நீர் வெட்டு

(UTV | கொழும்பு) –

இன்று (04) இரவு 9 மணி முதல் 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொலன்னாவ நகரசபை, கடுவெல நகரசபை, முல்லேரியா மற்றும் கொட்டிகாவத்தை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நீர் வெட்டு இன்று (04) இரவு 9 மணி முதல் நாளை (05) பிற்பகல் 3 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்பு வேலை காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விசேட பாராளுமன்ற அமர்வை 14ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானம்

editor

5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க புதிய திட்டங்கள்!

தேவைக்கு ஏற்ப IMF உதவியை நாடுவோம்