உள்நாடு

‘அல்லாமா இக்பால்’ புலமைப்பரிசில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் இறுதி திகதியில் மாற்றம்

(UTV|கொழும்பு) – இலங்கை மாணவர்களுக்கான பாகிஸ்தான் முன்னணி பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கான ‘அல்லாமா இக்பால்’ புலமைப்பரிசில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதியை, பாகிஸ்தான் உயர்க் கல்வி ஆணையம் மார்ச் 13 ஆம் திகதி வரை நீட்டித்துள்ளது.

இந்தப் புலமைப்பரிசில், பாகிஸ்தான் – இலங்கை உயர்க்கல்வி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், அடிப்படை மற்றும் இயற்கை விஞ்ஞானம், சமூக மற்றும் முகாமைத்துவ விஞ்ஞானம் போன்ற பல்வேறு கல்வித் துறைகளில், பாகிஸ்தானின் முன்னணி பல்கலைக்கழகங்களில், முழு நிதியுதவி அளிக்கப்பட்ட புலமைப்பரிசில்களை இத்திட்டம் வழங்குகிறது.

Related posts

BREAKING NEWS – மாவை சேனாதிராஜா காலமானார்

editor

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு உதவுமாறு ஜப்பானிய நிதியமைச்சர் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எத்தனோலை பயன்படுத்த நடவடிக்கை