வகைப்படுத்தப்படாத

அல்ஜீரியாவின் ஜனாதிபதி இராஜினாமா?

(UTV|ALGERIA) வட ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவின் ஜனாதிபதி அப்டெலாஸிஸ் போட்விலிக்கா (Abdelaziz Bouteflika) பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவியை இராஜினாமா செய்வார் என அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

அல்ஜீரியாவை கடந்த 20 வருடங்களாக ஆட்சி செய்துள்ள அப்டெலாஸிஸ் போட்விலிக்காவின் பதவிக்காலம் எதிர்வரும் 28ஆம் திகதி நிறைவடைகின்றது.

இந்தநிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரை பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

இதற்கமைய, அவர் அடுத்த தேர்தலில் போட்டியிடும் திட்டத்தை கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

ஆஸ்கர் விருதுகள் 2018 – முழு விவரம்

Met. predicts spells of showers today

மேல் கொத்மலை நீர்தேகத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு