வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு 12, வாழைத்தோட்டம் அல் ஹிக்மா கல்லூரியின் மாணவ, மாணவிகளுக்காக திரட்டப்பட்ட 10 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி உத்தியோகபூர்வமாக பாடசாலை அனர்த்த நிவாரண குழுவிடம் கையளிக்கப்பட்டது.
இது தொடர்பான நிகழ்வு 2026. 01.15ஆம் திகதி வியாழக்கிழமை கல்லூரி அதிபர் எம் எம் ஹுசைன் தலைமையில் கல்லூரியின் பழைய மாணவர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட மோசமான காலநிலை தொடர் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 161 மாணவ, மாணவிகள் மற்றும் 13 ஆசிரியர்களுக்கு என கல்லூரியின் முகாமைத்துவம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு(SDEC), பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் (PPA) மற்றும் அல் மஸ்ஜிதுன் நஜ்மி ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் உள்ளடங்கியதாக அல் ஹிக்மா கல்லூரியின் அனர்த்த நிவாரண குழு AL HIKMA DISASTER WELFARE கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டது.
இந்த குழுவினரால் சேகரிக்கப்பட்ட 10 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி மற்றும் ஆசிரியர்களுக்கான பல்வேறு உபகரணங்களே அதிபரிடம் உத்தியோகபூர்வ கையளிக்கப்பட்டது.
கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அல் மஸ்ஜிதுன் நஜ்மி ஜும்ஆப் பள்ளி வாசல் நிர்வாக சபையின் தலைவரும் பிரதம டிரஸ்டியுமான அல்ஹாஜ் நிஸ்வான் ஆசிரியர்,
பொருளாளரும் டிரஸ்டியுமான அல்ஹாஜ் யு எல் எம் அஸ்லம், பழைய மாணவர் சங்கத்தின் (PPA) பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என் ஏ எம் ஸாதிக் ஷிஹான், பொருளாளர் அஸ்ரின் ஹனிபா, ஆலோசகர் நூருல் ஹக், பாடசாலை முகாமைத்துவ உறுப்பினரான நஜீம் ஆசிரியர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் (SDEC) உறுப்பினர் அஷ்ரப் அலி, பழைய மாணவர் சங்கத்தின் உப பொருளாளர் அல்ஹாஜ் மிஸ்ருல் ஆப்தீன், விளையாட்டுக் குழு பொறுப்பாளர் எம். எப். எம். முனாஜி, பழைய மாணவர் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினரான மிப்ரா சலீம், ரோஷன், அஷ்ஷெய்க் அஹ்மத் யாஸிர், SDECயின் உறுப்பினர்களான பர்வின், ஸீனியா, பழைய மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
-ஸாதிக் ஷிஹான்
