அரசியல்உள்நாடு

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு – இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (14) நீதியரசர்களான மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்த, அதனை எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.

இந்த மனு சமூக செயற்பாட்டாளர் ஓஷலா ஹெராத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டில் ட்ரோன்(DRONE) தொழிநுட்பத்தின் முக்கியத்துவம் தொடர்பான பயிற்சி பட்டறை 

பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே முடியும் – சஜித்

editor

யூடியூப்பர் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

editor