அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (12) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் போது கிழக்கு மாகாண தளபதியாகப் பணியாற்றிய அருண ஜயசேகர், தற்போது பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருப்பது, அத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு முரண்பாடு ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

அதன்படி, இந்த முரண்பாட்டைக் காரணம் காட்டி, எதிர்க்கட்சி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ளது.

Related posts

நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு

பேருந்து கட்டணம் தொடர்பில் தீர்மானமில்லை

2021 கல்வியாண்டுக்கான A/L பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்