உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

அரிசிக் கடையில் கலப்படம் – அதிரடி சுற்றிவளைப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடையொன்று இன்று (20) சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸாருக்கும், நுகர்வோர் அதிகார சபையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த அரிசிக் கடையில் இந்தியா நாட்டு அரிசியை பொதி மாற்றி கலப்படம் செய்த தகவல் கிடைத்ததக்காகவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடை உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

கொழும்பு குப்பைகள் நவம்பர் முதல் புத்தளத்திற்கு…

ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கம்

அரச மருந்தாளர்கள் சுகயீன விடுமுறையில்