உள்நாடு

அரிசி விலை அதிகரிப்பு – உணவு பொதியின் விலையும் அதிகரிக்கப்படும்

தற்போது அரிகரித்துள்ள அரிசி விலையினால் எதிர்காலத்தில் உணவு பொதி ஒன்றின் விலை அதிகரிக்கப்படுமென அனுராதபுரம் மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரத்தில் இன்று (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் இந்திக்க அருண குமார இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது நிலவும் அரிசி நெருக்கடி காரணமாக பிரதேசத்தில் உணவகங்கள் மூடப்படும் நிலையும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 5,200 மெற்றிக் தொன் அரிசியின் முதல் தொகுதியும், 580 மெற்றிக் தொன் கொண்ட இரண்டாவது தொகுதியும் நேற்று நாட்டை வந்தடைந்தன.

அதன்படி, விநியோக நடவடிக்கைகள் இன்று நிறைவடைய உள்ளதாக, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்

Related posts

புதிய தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்

editor

துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில்!

முன்னாள் அமைச்சர் ராஜித தலைமறைவு – கைத்தொலைபேசியும் செயலிழப்பு

editor