உள்நாடு

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்

அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்படி அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையான அரிசி இருப்புகளைப் பெறமுடியும் என அண்மையில் நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே, எதிர்காலத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியிடமிருந்து நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்படவுள்ள 5 பில்லியன் ரூபாய் நிதி குறித்து குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா வினவியதுடன், அந்த நிதியை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான திட்டமொன்றின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, நெல் கொள்முதல் செயல்முறை கடுமையான மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கும், செயல்பாட்டில் ஏற்படக்கூடிய முறைகேடுகளைத் தடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து குழுக்கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

சந்திரிக்காவை அத்தனகல்லை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்

புதிய பிரதமர் தலைமையிலான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் நேரங்களில் மாற்றம்