உள்நாடு

அரசுக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காலி முகத்திடலில் கடந்த 09ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மூன்றாவது நாளாக இன்றும் (11) தொடர்கின்றது.

அதிகளவானோர், காலி முகத்திடலில், ஜனாதிபதி செயலக வளாகத்திற்கு முன்பாக கூடி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும், பொருளாதார முன்னேற்றத்திற்கு கொள்கை அடிப்படையிலான தீர்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பதாகைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதானி

editor

வவுனியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ்; 186 ஆக உயர்வு