உள்நாடு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – கடந்த அரசாங்க காலப்பகுதியல் அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்களிடமிருந்து  20,000 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக விசாரணைகளை மேற்கொளளும் விசேட ஆணைக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்குழுவில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 02, பார்க் வீதியில் அமைந்துள்ள, இலக்கம் 23, பார்க்லன்ட் கட்டடத்தின் 19ஆவது மாடியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு தபால் மூலம் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

எண்ணெய் விலை சரிந்தது

2 மாதங்களில் சுற்றுலாத்துறைக்கு 768.2 மில்லியன் டொலர் வருமானம்

editor

அவசரமாக கூடுகிறது IMF இன் நிறைவேற்று சபை

editor