உள்நாடு

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்தார்

அரசியலமைப்பு சபையின் செயலாளராக கடமையாற்றிய முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தம்மிக்க தசநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட விடயங்கள் காரணமாக இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மிக்க தசநாயக்க கடந்த 2023ஆம் ஆண்டு மே 25 ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் அதே ஆண்டில் அரசியலமைப்பு சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சம்மாந்துறை பிரதேசத்திற்கு அரச ஒசுசல மற்றும் பஸ் டிப்போ நிறுவுவதற்காக அஷ்ரப் தாஹிர் எம்.பி நடவடிக்கை

editor

பிரதமரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிவிட்ட

மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

editor