அரசியல்உள்நாடு

அரசின் கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கும் நேரத்தில் மாற்றம்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் 2024 நவம்பர் 21ஆம் திகதி மு.ப 11.30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 33 (அ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், அரசியலமைப்பின் 33 (ஆ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்தின் வைபவரீதியான அமர்வுகளில் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகின்றது.

இதன்போது ஜனாதிபதியினால் அவரது அரசாங்கத்தின் எதிர்கால நோக்கு தொடர்பிலான விளக்கமான பகுப்பாய்வு கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக பாராளுமன்றத்துக்கும் மக்களுக்கும் முன்வைக்கப்படும்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி அநுர

editor

மஹிந்த ராஜபக்ஷஅடுத்த பிரதமரா? விளக்கமளிக்கும் SLPP

நீர் விநியோகம் குறித்து வௌியான எச்சரிக்கை

editor