வகைப்படுத்தப்படாத

அரசாங்கம் மறுசீரமைப்பு பாதையில் இருந்து விலகியுள்ளது – சர்வதேச நெருக்கடிகள் குழு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை அரசாங்கம் மறுசீரமைப்பு பாதையில் இருந்து விலகி இருப்பதாக சர்வதேச நெருக்கடிகள் குழு, தமது அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

இலங்கையில் புதிய அரசாங்கம் பதவி ஏற்று 2 வருடங்கள் கடந்துள்ள போதும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இது இன்னுமொரு புதிய முறுகலை ஏற்படுத்திவிடும் அபாயத்தை கொண்டிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யுத்தகாலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொறுப்புக்கூறாமல், நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என்று சர்வதேச நெருக்கடிகள் குழு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

Groenewegen wins stage 7 of Tour de France

கிம்மின் விருப்பங்களை நிறைவேற்றுவேன்

நோயாளர்களுக்கு விமானத்தில் செல்லும் வாய்ப்பு