நாட்டை திரைப்படம் போலவேதான் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள் நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏங்கேயோ ஓரிடத்தில் கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதைப்பார்த்து எமது மக்களும் திருடர்களைக் கைது செய்கின்றாரகள், திருடர்களை சிறையிலே அடைத்து விடுகின்றார்கள் என சந்தோசப்படுகின்றார்கள்.
அது எங்களுக்கும் சந்தோசம்தான் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கோட்டைகல்லாறு பிறண்சிப் விளையாட்டுக் கழகம் நடாத்திய கலாசார விளையாட்டு விழா கோட்டைக்கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்;டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
மட்டக்களப்பு மாவட்டாத்திலே சொத்துக்களையும், வளங்களையும் களவு செய்த பட்டியலை வெளியிட்டத்தில் பெருளவான பங்கு எமக்கிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற மண்வளங்களைச் சூறையாடுவதைப்பற்றி, மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒருலெட்சம் வேலைவாய்ப்பிலே கொள்ளையடித்தைதைப்பற்றி, ஒப்பந்தங்கள் செய்து கொள்ளையடித்தது, போன்றவற்றையெல்லாம் தொடற்சியாக வெளிப்படுத்தி வந்தவர்கள் நாங்கள்.
இந்த ஊழல்களுக்கு எதிராக நாங்கள் அதிகளவு குரல் கொடுத்திருக்கின்றோம்.
பன்முகப்படுத்தப்பட்ட நிதியை எவ்வாறு கையாள்வது என தெரியத சில முட்டாள்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிமீதும் எமது கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதும் நாங்கள் மோசடி செய்ததாக பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள்.
எவ்வளவோ ஊழல் மோசடிகளை நாங்கள்; வெளிப்படுத்திய எங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்ததனால்தான் மக்கள் அதிகூடிய வாக்குகளை மட்டக்களப்பு மக்கள் எனக்குத்தந்தார்கள். ஒருசிலர் எமக்கு அவப் பெயரை உருவாக்கப் பார்க்கின்றார்கள்.
அரசாங்கம் செய்யும் கைது நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கின்றோம்.
ஆனால் நாம் எதிர்பார்ப்பது என்னவெனில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் கடந்த ஒரு வருடத்தில் அரசாங்கம் சேகரித்த நிதி எங்கே அந்த நிதியைக் கொண்டு வந்து அபிவிருத்தி செய்யுங்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.