அரசியல்உள்நாடு

அரசாங்கம் ஏமாற்று வேலைகளை செய்கிறது – சஜித் பிரேமதாச

ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு வந்த பொதுத் தேர்தல் சமயத்திலும் தொழில்களைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதிகள் வழங்ககப்பட்டன.

அமைச்சுப் பதவிகளைப் பெற்றதன் பிற்பாடு தொழில்களைப் பெற்றுத் தருவோம் என்று தற்போதைய ஆளும் தரப்பினர் கூறிய ஆடியோ பதிவுகள், வீடியோ பதிவுகள் உட்பட அனைத்து ஆதாரங்களும் எம்மிடம் காணப்படுகின்றன.

தற்போதைய அரசாங்கம் பட்டதாரிகளின் வேலையில்லா நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மாவட்ட மட்டத்தில் அமைப்புகளை நிறுவி, அந்த அமைப்புகளின் தலைவர்களுக்கு மாத்திரம் நியமனங்களைப் பெற்றுக் கொடுத்து, ஏனைய பட்டதாரிகளை கைவிட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், தற்போதைய ஜனாதிபதி, தான் ஆட்சிக்கு வந்ததும் நமது நாட்டில் 35,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் பெற்றுத் தருவேன் என்று உறுதியளித்தார்.

இந்த வாக்குறுதி வளமான நாடு, அழகான வாழ்க்கை எனும் கொள்கை அறிக்கையின் 72 ஆவது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், 20,000 பேரை ஆசிரியர் தொழிலுக்கும், 3,000 STEM பட்டதாரிகள் மற்றும் 9,000 STEM அல்லாத பட்டதாரிகள் தகவல் தொழிநுட்ப துறையிலும், மேலும் 3000 பேர் ஏனைய துறைகளிலும், சுங்கத் திணைக்களம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்றவற்றில் 3,000 தொழில்களைப் பெற்றுத் தருவோம் என வழங்கிய வாக்குறுதிகளை தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் இரு வரவு செலவுத் திட்டங்களிலும் மீறி, இதை மறந்து செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு பொய் சொல்லி, பட்டதாரிகளை ஏமாற்றியது ஏன் ? வேலையில்லாப் பட்டதாரிகளை அலைக்கழித்தது ஏன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு கேள்வி எழுப்பினார்.

நேற்று வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி முன்வைக்கும் போது, வேலையற்ற பட்டதாரிகளை மீண்டும் ஏமாற்றியமை தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

52,000 பட்டதாரி தொழில் வெற்றிடங்களை வைத்துக்கொண்டே அரசாங்கம் இந்த ஏமாற்று வேலைகளைச் செய்கிறது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஏன் இந்த அநீதியைச் செய்கிறது என்று ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறோம்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஏன் இந்த அநீதியைச் செய்கிறது என்று ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறோம். பிரதமரின் அமைச்சரவைக் குறிப்பின்படி, 52,000 பட்டதாரி வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

வேலையில்லாப் பட்டதாரிகளின் தோள்களில் சுமந்து, அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்ட இவர்கள், வேலையில்லாப் பட்டதாரிகளின் தேவைப்பாடுகளை ஒதுக்கி வைத்து செயற்படுவது வருத்தமளிக்கும் செயலாகும்.

இது அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் செயலாகும்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளை மானசீக ரீதியாக கொடுமைக்கு ஆளாக்குகிறது. இவர்களை வேறுவிதமாக நடத்ததாது, இவர்களுக்கான தொழில் வாய்ப்புகளைப் மெற்றுக் கொடுங்கள்.

எதிர்க்கட்சி இதற்கான முழு ஆதரவையும் வழங்கும். மேலதிக ஒதுக்கீட்டு மதிப்பீடுகளைக் கொண்டுவதற்குத் தேவையான ஆதரவைப் பெற்றுத் தருவோம். இவர்களுக்கு இப்போதாவது தொழில்களைப் பெற்றுக் கொடுங்கள்.

இப்போதும் இவர்களை ஏமாற்ற வேண்டாம்.

இப்போதாவதை பொய்கள் ஏமாற்றுகள் மூலம் நாட்டை ஆள்வதைக் கைவிடுங்கள்.

மூன்று தேர்தல்களில் வழங்கிய இந்த வாக்குறுதியை நிறைவேற்றிக் கொடுங்கள், இந்த பட்டதாரிகளின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுங்கள்.

பட்டதாரிகளை மானசீக உளைச்சலுக்கு ஆளாக்காமல் இருப்பது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் – வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை

editor

சில அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

கொழும்பில் இன்று விசேட சோதனை நடவடிக்கை