உள்நாடு

அரசாங்கத்தை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் பாரிய போராட்டம்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்தை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் பாரிய போராட்டம் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

முக்கியமாக சமூக ஊடகங்கள் மூலமாகவும் அரசியல் தலையீடுகள் இன்றியும் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதியான போராட்டத்தில் பல இளைஞர் குழுக்கள் கலந்து கொள்கின்றன.

வெளிநாட்டிலிருந்து பயணித்த இலங்கையர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சம்பவ இடத்திலுள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் காலி முகத்திடலுக்கு வந்து இந்த இயக்கத்திற்கு ஆதரவளிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டனர்.

தற்போதைய பொருளாதார மந்தநிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வலுவான தலைமைத்துவம் தேவை என அவர்கள் தெரிவித்தனர்.

மக்கள் தகுந்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு வழி வகுக்கும் வகையில், அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தொடர்ந்து கோஷமிட்டு வருகின்றனர்.

அப்பகுதியில் பலத்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்று

எதிர்க்கட்சிகளைப் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு கவலையளிக்கின்றது – இம்ரான் எம்.பி

editor

மற்றுமொரு நபர் சுகமடைந்தார்