நாடு முழுவதும் தற்போது கடும் அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளதால், இந்தப் அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடி நிவாரணம் பெற்றுக் கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
இதற்குத் தேவையான உட்சபட்ச ஆதரவை எதிர்க்கட்சி முழுமையாப் பெற்றுத் தரும் என்று இன்று (28) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த நிவாரண நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கும், இது தொடர்பான குறைநிரப்புப் பிரேரணையை அரசாங்கம் சமர்ப்பித்தால் அதற்கு எதிர்க்கட்சி பூரணை ஆதரவைப் பெற்றுத் தரும்.
மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு நிதியை அவசரமாக ஒதுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்துதல்களைப் பிறப்பிக்குமாறும் அரசாங்கத்திடம் மேலும் கோரிக்கை விடுத்தார்.
