அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

அரசாங்கத்தின் அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போர்க்கொடி

ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அறிவித்தது ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் முரணானது என்று நாங்கள் கருதுகிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடக அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், தற்பொழுது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உள்ளுாராட்சி மன்ற தேர்தல் விஷேட சட்ட மூலம் அடிப்படையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு பெறப்படும் திகதி அறிவிக்கும் முழு அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அவர்களுக்கு கீழ் இயங்கும் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து மூன்று மாதத்துக்குள் உள்ள ஒரு திகதியாக வேண்டும். ஆகவே தேர்தல் ஆணைக்குழு சகல அரசியல் கட்சி செயலாளர்களை அழைத்து கலந்தாலோசித்த பிற்பாடு திகதி அறிவிக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்துக்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாக திகதியை தீர்மானிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாக நாங்கள் கருதுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

-நூருல் ஹுதா உமர்

Related posts

இந்திய கடற்படைத் தளபதி பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்திற்கு பிரியாவிடை!

editor

ஜனாதிபதி அநுர தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

editor