உள்நாடு

“அரசாங்கத்தால் ஜனநாயகத்திற்கு மரண அடி” – சஜித்

(UTV | கொழும்பு) – நாட்டின் ஜனநாயகத்திற்கு மரண அடி கொடுத்து மக்களின் உரிமைகளை மீறுவதுடன் மக்களின் வாழ்வுக்கான சுதந்திரத்தையும் கூட அரசாங்கம் முடக்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

போராட்டத்திற்கு பங்களித்த இளைஞர்களை அரசாங்கம் வேட்டையாடுவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் வசந்த முதலிகே போன்ற இளைஞர்கள் இதற்குப் பலியாகியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தம் போடும் நபர்களுக்கு ஒரு சட்டமும், போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு மற்றொரு சட்டமும் பிரயோகிக்கப்படுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த அவல நிலையை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நேற்று (25) பிற்பகல் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்புப் பிரிவு பிரதிநிதிகளை சந்தித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor

பெண்களை விட ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது அதிகரிப்பு – வைத்தியர் சமன் இத்தகொட

editor

வீடியோ | இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor