சூடான செய்திகள் 1

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்

(UTV|COLOMBO) – எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தொழிற்சங்க போராட்டம் ஒன்றில் ஈடுபடபோவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள தீர்மானங்களை செயற்படுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் சட்டவிரோத இடமாற்றங்கள் தொடர்பில் தமது சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிட்டதாகவும் அதனை கருத்திற்கொண்டு சகல இடமாற்றங்களையும் இரத்து செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோத வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு

முன்பள்ளிகளுக்கு விடுமுறை…

BREAKING NEWS – ருஸ்தி பிணையில் விடுதலை

editor