சூடான செய்திகள் 1

அரச மருந்தாளர்கள் சுகயீன விடுமுறையில்

(UTV|COLOMBO)-தேவைக்கு அப்பாற் பணியில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பினை தெரிவித்து நாடுபூராகவும் உள்ள அரச மருந்தாளர்கள் இன்று(01) சுகயீன விடுமுறையில் உள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரியங்கர பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டாலும், சிறுவர் நோய், புற்றுநோய், சிறுநீரக நோய் மற்றும் அவசர பிரிவுக்கு உள்வாங்கப்படும் நோயாளர்களுக்கு எவ்வித அசௌகரியங்களையும் முன்னெடுக்கப்படாதவிடத்து தாம் அவதானமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இன்று(01) சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளருடன் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் சாதகமான முடிவு எட்டும் என நம்புவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

 

 

 

 

Related posts

கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு

🛑 Breaking News : வென்றார் சபாநாயகர் (VIDEO)

2019 ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல்…