உள்நாடு

அரச நிறுவனங்களில் இடம்பெறும் இலஞ்சம் கோரும் நடவடிக்கைகளுக்கு முடிவு

(UTV|COLOMBO) – அரச நிறுவனங்களில் சேவையை பெற்றுக்கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் இலஞ்சம் பெறும் உத்தியோகத்தர்கள் மற்றும் இடத்தரகர்களை அதே இடத்தில் கைது செய்வதற்கு சிறப்பு நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேல் மாகாணத்தை கேந்திரமான கொண்டு இதற்கென பொலிஸ் பிரிவு ஒன்று செயற்பட்டு வருவதுடன் மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் இதன் தலைமை அதிகாரியாக செயற்படுகின்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக செயற்படும் இந்த பிரிவில் புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சிலரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு

இலங்கை பொலிஸுக்கு சீன வானொலி அமைப்பு

மின்சார சபை 2023 ஆம் ஆண்டிற்கான அபரிதமான இலாபத்தை அடைந்துள்ளது