உள்நாடு

அரச நிறுவனங்களது புதிய கட்டிட நிர்மாண நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு ) – நாட்டின் பொருளாதார நிலைமையினை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை அனைத்து அரச செலவீனங்களையும் மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, தற்போது ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்குமாறு, அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபை செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு, திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த அரச நிறுவனங்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரச நிறுவனங்களில் புதிய கட்டிடங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்திவைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

கல்கிஸ்ஸ பகுதியில் கோர விபத்து – ஒருவர் பலி

editor

வடக்கு ஆளுநருக்கும் இந்திய துணைத் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

editor

OPA வீதி காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் – தே.ம.சக்தி அமைப்பாளர் றியாஸ்

editor