உள்நாடுசூடான செய்திகள் 1

அரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசு தீர்மானம்

(UTV | கொழும்பு) – கூட்டுதாபனங்கள், சபைகள், அரசியல் அமைப்புச் சபை ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களின் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார்.

சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் இது குறித்து அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச கூட்டுதாபனங்கள், சபைகள், அரசியல் அமைப்புச் சபை ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களின் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கு ஜனாதிபதியின் இணக்கப்பாடு அவசியம் எனவும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் குறித்த நிறுவனங்களுக்கான தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை விசேட குழுவொன்றின் பரிந்துரைக்கு அமையவே நியமிக்கப்பட்டது.

அதனால் அதில் மாற்றம் ஏற்படுத்தாது அவர்களை தொடர்ந்தும் கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி செயலாளர் அந்த கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளார்.

Related posts

கெஹெலிய ரம்புக்வெலவின் அடிப்படை ஆட்சேபனை மனு நிராகரிப்பு

கொழும்பு – கம்பஹாவில் சில பகுதிகள் விடுவிப்பு

சம்மாந்துறை பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணம்!

editor