உள்நாடு

அரச ஊழியர்களை மட்டுப்படுத்தி சேவைக்கு அழைக்க கோரிக்கை

(UTV | கொழும்பு) –  அரசாங்க சேவையில் உள்ள ஊழியர்களின் வரவினை குறைக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ் ருவன்வந்து ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரசாங்க சேவையில் உள்ள ஊழியர்களை பணிக்கு வரவழைப்பதில் சில நிபந்தனைகளை முன்வைத்து அரச நிறுவனங்களுக்கு ஆணையாளர் நாயகம் கடிதமொன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிட்டும் வரையில் இவ்வாறு ஊழியர்களை மட்டுப்படுத்தி சேவைக்கு அழைக்க அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆன்லைன் முறையில் நிறுவன பதிவாளர் செயல்பாடுகள்

மழையுடன் கூடிய வானிலை – 2 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.

ஜனாதிபதிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வருமாறு அழைப்பு