உள்நாடு

அரச ஊழியர்களுக்கு இனி வெள்ளியன்று விடுமுறையில்லை

(UTV | கொழும்பு) –  அரச துறை ஊழியர்களுக்கு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போதுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து வசதிகளைக் கண்டறிய அரச துறை ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக வெள்ளிக்கிழமைகளில் அரசாங்க அலுவலகங்களை மூடுவதற்கான யோசனைக்கு ஜூன் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

எதிர்காலத்தில் ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அரச துறை ஊழியர்களும் ஊக்குவிக்கப்பட்டனர்.

அதன்படி, வெள்ளிக்கிழமைகளில் மூன்று மாதங்களுக்கு அரசு அலுவலகங்களை மூட அனுமதி அளிக்கும் வகையில் ஜூன் 15ஆம் திகதி சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

எவ்வாறாயினும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த சுற்றறிக்கையை இரத்து செய்யுமாறு பொது நிர்வாக அமைச்சர் என்ற வகையில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாதவாறு பொதுப் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நூதனசாலைகளை மீள திறக்க தீர்மானம்

NPP எம்.பி.க்களினால் சிபாரிசு செய்யப்பட்டோருக்கு பேசா விசா

editor

ஜனாதிபதி அநுர தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட இறுதி கட்டம் தயாரிப்பு தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல்

editor