உள்நாடு

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பான சுற்றுநிருபம் வெளியானது

(UTV | கொழும்பு) – அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிப்பதற்கான சுற்றுநிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டதை அடுத்து மேற்படி சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேவையேற்படின், தமது விருப்பத்திற்கு அமைய 55 வயதில் அரச சேவையாளர்கள் ஓய்வு பெற முடியும் என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டுக்கு ரணிலின் வெற்றி அவசியம் – அமைச்சர் டக்ளஸ்

editor

08 இந்திய மீனவர்கள் கைது

editor

அனைத்து இறுதி சடங்குகளையும் 24 மணித்தியாலங்களில் நிறைவு செய்க