உள்நாடுபிராந்தியம்

அரச உத்தியோகத்தர்களின் உடல், உள ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கு உடற்பயிற்சி

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் உடல், உள ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொற்றா நோய் மற்றும் மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு சகல உத்தியோகத்தர் களினதும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவு குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.

அதற்கிணங்க, பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.எம்.எஸ்.இர்ஷாத் அவர்களினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் உடற்பயிற்சியும் (25) பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

இதன்போது பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், தொற்றா நோய் தொடர்பாகவும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்தும் விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஏ.ஏ.எம்.புஹைம் உடற்பயிற்சி அளித்து அது தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

-நூருல் ஹுதா உமர்

Related posts

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம்; ஐவர் வைத்தியசாலையில்

ஒட்சிசன் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

நீர்கொழும்பு உணவகம் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் சரண்