அரசியல்உள்நாடு

அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம் என்ற தொனிப்பொருளில் விழா!

“அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம் “என்ற தொனிப்பொருளில் இன்று வெள்ளிக்கிழமை (19) மாலை, கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்தற்கு தமிழ்நாட்டிருந்து வருகை தந்துள்ள நிகழ்வின்  முக்கிய கதாநாயகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மற்றும் இந்திய பாராளுமன்ற வேலூர் தொகுதி முன்னாள்  உறுப்பினரும், இந்திய யூனியன்  முஸ்லிம் லீக் தமிழ்நாடு முதன்மை துணைத் தலைவருமான எம்.அப்துல் ரஹ்மான்,தமிழ்நாடு சட்ட மன்ற  நாகப்பட்டினம் உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்  உட்பட மற்றும் அதிதிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்  சந்தித்தபோது பிடித்த படம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என். எம் .அமீன்,அதன் செயலாளர் சாதிக் சிஹான் ,திருச்சி ஊடகவியலாளர் எம்.கே.ஷாகுல் ஹமீது ஆகியோரும் உடனிருந்தனர்.

இசைமுரசு நாகூர் ஈ.எம்.ஹனிபாவின் பிறந்த நூற்றாண்டு நிகழ்வும் இதன்போது இடம் பெறுகிறது.

Related posts

10 ஏக்கர் காணி எரிந்து நாசம்!

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை

சாதாரண தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இம்மாத இறுதியில்