உள்நாடுகாலநிலை

அம்பாறையில் மழையுடன் கூடிய காற்று

அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டமையினால்   பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

திங்கட்கிழமை (06) இரவு நேரத்தில் சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காணப்பட்டது.  

குறிப்பாக நாவிதன்வெளி  கல்முனை முஸ்லிம் பிரிவு தமிழ் உப பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட  பிரதான போக்குவரத்து பாதைகள் நீர் நிரம்பியது.

திடீரென பெய்த மழை காரணமாக ல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பாண்டிருப்பு,  கல்முனை சாய்ந்தமருது,  மருதமுனை நற்பிட்டிமுனை பிரதேச பிரதான பாதைகளில் நீர் நிரம்பி ஓடுவதுடன் வாகன சாரதிகள் பாதசாரிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

சில வீதிகளில் வடிகான்களுக்கு மேலாக மழை நீர் பரவுவதால் வீடுகளுக்குள் நீர் உட் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கையை பொது மக்கள் மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிந்தது.

Related posts

மூடப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு

editor

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ரிஷாட் எம்.பி அனுதாபம்

editor

ரயில் சேவைகள் வழமைக்கு