உள்நாடுபிராந்தியம்

அம்பாறை மத்திய முகாம் பகுதியில் ஒருவர் அடித்துக் கொலை – இருவர் கைது

அம்பாறை மத்திய முகாம் பகுதியில் ஒருவர் தடியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பழைய தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வீரகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மத்திய முகாம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளார்.

மத்திய முகாம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி – நால்வர் படுகாயம்

editor

ஜனாதிபதி அநுவுக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor

புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம்!!