நவராத்திரி வழிபாடுகளை கொண்டாடும் இத்தருணத்தில், எதிர்க்கட்சித் தலைவராக,
மக்களுக்கு அனைத்து வளங்களும் கிட்டும் சிறந்த எதிர்காலத்தின் ஆரம்பம் உதயமாகும் புதிய நாளின் விடியலைக் குறிக்கும் ஒரு புதிய இரவு உதயமாகட்டும் என்பதாகும். இலங்கை இந்து பக்தர்களுக்கு இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
நாட்டில் ஒறுமைப்பாடு, மதங்களுக்கிடையில் ஒற்றுமை, சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவ பிரார்த்திக்கின்றேன்.
நிலவும் எல்லா முரண்பாடுகளும் நீங்கி, வளமான நாடு உருவாக வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (30) மாலை இடம்பெற்ற நவராத்திரி கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நவராத்திரி விழா பொதுவாக புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் இருக்கும் காலத்தில் கொண்டாடப்படுகிறது.
இருளை அகற்றி ஒளியை உதயமாக்கும் இந்து மத மக்களின் உன்னதமான பண்டிகையாக இதை அழைக்கலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஒன்பது நாட்கள் அல்லது இரவுகள் பூராகவும் வலிமையின் அடையாளமான துர்கா தேவியின் புதிய சகோதரிகளுக்கு காணிக்கைகள் செய்யப்படுகின்றன. இந்த மத பாரம்பரியம் வண்ணமயமான நடனங்களுடன் கொண்டாடப்படுகிறது.
கடவுளுக்கு காணிக்கை செலுத்துவது, செழிப்புக்காக வேண்டிப் பிரார்த்திப்பது, கல்விக்கான ஒரு புதிய ஆரம்பத்தை பெறுவது இதன் முக்கிய நோக்கங்களாகும். அறுவடை கிட்டும் காலப்பிரிவில் இது நடைபெற்று வருகிறது.
முதல் மூன்று நாட்களில், காளி தேவிக்கு அஷ்டோத்ர அர்ச்சனை, மூலமந்திர ஜபம் போன்றவற்றை செய்து பிரார்த்தனைகள் நடைபெறும் என்றும், தேவியின் சக்தி மற்றும் அருளை பெறுவதற்கு அவளை வழிபடுவார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்து பக்தர்கள் இந்த ஒன்பது நாட்களும் மாமிசம் உண்பதை தவிர்த்து மத விரதத்தை கடைப்பிடிக்கின்றனர்.
கடவுள்களின் ஆசீர்வாதத்தின் மூலம் நாட்டிற்கும், தங்களுக்கும், மக்களுக்கும் செழிப்பு கிட்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.
இருண்ட பாதையில் ஒரு விளக்குத் தீபம் வழியை காட்டுவது போல, மனித வாழ்வில் கருணை எனும் தீபம் மனித வாழ்க்கையை வளமாக்குகிறது.
நவராத்திரி பண்டிகை கருணை அல்லது ஆன்மீக ஞானத்தின் ஒளியைக் கொண்டுவருதனால் இது தேசிய ஒற்றுமையை உருவாக்குகிறது.
இங்கு, விளக்குகளை ஏற்றுவதன் மூலம், மாயை மற்றும் அறியாமையின் இருள் அகற்றப்படுகிறது.
ஞானம் எனும் ஒளி பரவுகிறது. நம்பிக்கை நிறைந்த விளக்கின் ஒளி சமூகங்களிடையே நல்லிணக்கம், பரஸ்பரம் மற்றும் செழிப்பை உருவாக்கின்றன.
மக்களிடையே பிரிவினை தோற்றுவிக்கும் சகல வேறுபாடுகளையும் இல்லாதொழிக்கும் சந்தர்ப்பமாக நவராத்திரி அணுஷ்டிக்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.