சூடான செய்திகள் 1

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அலுவலக பணியாளர்கள் மூவருக்கும் மீண்டும் விளக்கமறியல்

(UTV|COLOMBO) கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அலுவலக பணியாளர்கள் மூன்று பேரும் இம்மாதம் 6ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவமதிக்கும் வகையிலும் , இனங்களுக்கிடையே வெறுப்பை தூண்டும் வகையிலான 600 கடிதங்களுடன் இவர்கள் கடந்த மாதம் 2ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

 

 

 

Related posts

இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை 06 மாதத்திற்குள் நடத்தவும்

பரீட்சையை இலகுபடுத்துவது குறித்து ஆராய குழுவொன்று நியமனம்

சுதேசிய வைத்திய கல்லூரி கல்வி நடவடிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பம்