சூடான செய்திகள் 1

அமைச்சர் சம்பிக அக்குறணை விஜயம் – நகரை புதிதாக திட்டமிட ஏற்பாடு

(UTV|COLOMBO) அக்குறணை நகர் பல்கலாசார மக்களை கொண்டதும், கண்டி மாவட்டத்தின் மிகப்பெரிய பொருளாதார முக்கியத்துவம்வாய்ந்த நகராகவும் காணப்படுகிறது. இலங்கையின் பிரதானமான ஒரு வீிதியான ஏ-09 வீதியில் அமைந்துள்ள அக்குறனை நகரை எதிர்கால நடவடிக்கைகளுக்காக வேண்டி புதிதாக திட்டமிட வேண்டிய தேவை காணப்படுகின்றது.

குறித்த பின்னணியில் முஸ்லிம் சமய விவகாரம், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைவாக மாநகர திட்டமிடல் அமைச்சினால் அக்குறனை நகர் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட ஏற்பாடாகியுள்ளது.

இதனைடிப்படையில் அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீமின் வேண்டுகோளுக்கு இனங்க அக்குறனை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் காணப்படும் குறைபாடுகள் பற்றி ஆராயுமுகமாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க எதிர்வரும் வியாழக்கிழமை (7) பி.ப.1.30 மணிக்கு அக்குறணைக்கு விஷேட விஜமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

 

 

 

 

Related posts

ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை பயிற்சி

ஜனாதிபதி அநுர தலைமையில் 2026 வரவு செலவு திட்ட பூர்வாங்க கலந்துரையாடல்

editor

கடற்படையின் புதிய கடற்படை தளபதி நியமிப்பு…