வகைப்படுத்தப்படாத

அமேசானில் பரவி வரும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஜி7 நாடுகள் உதவி

(UTVNEWS|COLOMBO) – அமேசான் காட்டுத்தீ காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ ஜி-7 அமைப்பின் உறுப்பு நாடுகள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அமேசானில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த காட்டுத்தீயால் உலக நாடுகள் மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

அமேசான் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா உள்ளிட்ட வேறு 8 நாடுகளிலும் இந்த காடுகள் பரவி கிடக்கின்றன. இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு கொலம்பியா அரசு நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தது.

பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் ஜி-7 மாநாடு நடந்து வரும் நிலையில், அதில் பங்கேற்றுள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அமேசான் காட்டுத்தீ குறித்து விவாதித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யேமனின் தலைநகர் சானாவில் அவசரகால நிலை

அரசு அலுவலக வளாகத்தில் தீ விபத்து…

Veteran Radio Personality Kusum Peiris passes away