உலகம்

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் பிரேசில்

(UTV | பிரேசில் ) – பிரேசில் நாட்டில் கொரோனா தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரையில் 43,389 ஆக பதிவாகியுள்ளது.

பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.65 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.37 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

Related posts

டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் அதிகாரி நீக்கம்

பசி பட்டினியால் வாடும் காஸா மக்கள் – நிவாரண பொருட்களுடன் இஸ்ரேலின் அனுமதிக்காக காத்துக்கிடக்கும் லாரிகள்

editor

மலேசியா – நாளை முதல் முடக்கநிலை