உலகம்

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து – 6 பேர் பலி

அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து அமெரிக்க நேரப்படி நேற்று (10) பிற்பகல் நிகழ்ந்தது.

விமானியைத் தவிர இறந்த ஐந்து பேரும் ஸ்பெயினிலிருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இறந்தவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்படும் வரை பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படாது என்று நியூயோர்க் பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Related posts

சீனா விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

கொரோனா தொற்றினால் 84 இலட்சம் பேர் பாதிப்பு

கொரோனாவுடன் இணைந்த வௌவால் வைரசுகள்