வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

(UTV|AMERICA)-அமெரிக்காவில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் 1431 விமானங்களின் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கன்சாஸ், இன்டியானா பொலிஸ், வாஷிங்டன், டென்வர், மிசோரி, செயின்ட் லூயிஸ், அர்கன் சாஸ் உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தெற்கு டென்வரில் உள்ள சாங்ரீ டி கிறிஸ்டோ மலைப் பகுதியில் 45 செ.மீ. அளவுக்கு பனி உறைந்து கிடக்கிறது.

12,645 விமானங்கள் தாமதமாக வந்து சென்றுள்ளதுடன் கடும் பனி மூட்டம் காரணமாக அமெரிக்காவில் ஏராளமான விமான நிலையங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

சர்ச்சையை கிளப்பிய டிரம்ப் மனைவி கோட்

CID permitted to question IGP over lift incident

TID arrests NTJ member who tried to leave country