வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு இலங்கை வாழ்த்து

(UDHAYAM, COLOMBO) – அமெரிக்காவின் 241வது சுதந்திரதினம் இன்றாகும்.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் சார்பிலும் நாட்டு மக்களின் சார்பிலும் அமெரிக்க மக்களுக்கும் ஜனாதிபதி டொனால்ட் ரட்ரம்புக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான உறவு மிகவும் பழமைவாய்ந்ததாகும். ஐக்கிய அமெரிக்க குடியரசின் அரசியல் யாப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இந்த உறவு தொடர்ந்து வருகின்றது. எமது மக்கள் இந்த உறவுகளை வலுப்படுத்துவதில் முன்னின்று செயற்படுகின்றனர்.

1948ம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அரசியல் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்புகள் இருந்து வருவதுடன் இரு நாடுகளுக்கிடையில் இந்த உறவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று விசேடமாக தேர்தலுக்கு பின்னரான இலங்கை தேசிய ஐக்கிய அரசாங்கம் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை இரு தரப்பு மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த துறைகளில் திடமான வகையில் ஒத்துழைப்புடன் முன்னெடுத்து வருகின்றது.

உங்களது தலைமைத்துவத்தின் கீழ் அமெரிக்காவின் பங்களிப்புடன் ஜனநாயக பெறுமதிகள் மற்றும் பரஸ்பர சாதகமான வளர்ச்சி மிகுந்த பொருளாதாரம் , வணிக உறவுகள் எமது பொதுவான உறுதிப்பாட்டின் அடிப்படையில் மேலும் மேம்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச்செய்தியில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

Over 600,000 people affected by drought – DMC

மட்டக்களப்பில் சர்வதேச புகைத்தலுக்கு எதிரான தினம்

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா