வகைப்படுத்தப்படாத

அமெரிக்கா – வடகொரியாவிற்கும் இடையிலான 02வது உச்சிமாநாடு பெப்ரவரி மாத இறுதியில்..

(UTV|AMERICA)-அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையிலான இரண்டாவது உச்சிமாநாட்டை எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியளவில் நடத்துவதற்கும் இருதரப்பும் தீர்மானித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குறித்த திட்டத்திற்கு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அண்மையில் வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வடகொரிய இராஜதந்திரி கிம் யொஹ் சொல்-உடனான சந்திப்பை தொடர்ந்தே கிம் ஜொங் உன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜானதிபதி ட்ரம்பின் நேர்மறையாக சிந்தனை மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக வடகொரிய தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய அமெரிக்காவுடன் இணைந்து இரு நாடுகளும் அடைந்த இலக்கை நோக்கி முன்னோக்கி நகர்வதற்கு பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக வடகொரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

 

Related posts

ஜனாதிபதி இன்று இந்தோனேசியா பயணம்

උතුරු පළාත් ආණ්ඩුකාරවරයා යාපනය ආරක්ෂක‍ සේනා ආඥාපති හමුවෙයි

Halle Bailey is Ariel in Disney’s “Little Mermaid”