உள்நாடு

அமெரிக்கா புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி

(UTV | கொழும்பு) –  அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வரலாற்று ரீதியிலான உங்களது வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஜனாதிபதி ஜோ பைடன், எமது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உங்களுடன் பணியாற்ற எதிர் பார்க்கின்றேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹெரிஸ் ஆகியோருக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான 72 வருட கால ராஜதாந்திர உறவினை மேலும் வலுப்படுத்துவதற்கு குறித்த இருவருடனும், இணைந்து பயணிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு!

editor

அட்டுளுகம சிறுமி கொலை : சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய நபர் கைது

IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற நபருக்கு கொரோனா உறுதி [UPDATE]