வகைப்படுத்தப்படாத

அமெரிக்கா பத்திரிக்கை நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

(UTV|AMERICA)-அமெரிக்கா, மேரிலாண்ட் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகியதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகச் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அனாபோலிஸில் உள்ள `Capital Gazette` என்ற பத்திரிக்கை நிறுவனம் மீதே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாகக் குறித்த பத்திரிகை நிறுவனத்தை இலக்காகக்கொண்டு சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல்கள் வெளியானதாகவும், இது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்நிலையில் சந்தேக நபர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

රජයට එරෙහි විශ්වාසභංගය වැඩි ඡන්දයෙන් පරාජයට පත්වෙයි

Census 2020: Trump drops plan for controversial citizenship question

எரிபொருள் பிரச்சினையா… இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்