அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அமெரிக்கா, ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , முதலில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச் சபை கூட்டத்திற்காக அமெரிக்காவிற்கும், அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இது தொடர்பில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி செப்டம்பர் 23 ஆம் திகதி அமெரிக்காவிற்குப் புறப்பட்டு, 24 ஆம் திகதி ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றுவார், இதன்போது இலங்கையின் வெளியுறவுக் கொள்கை உட்பட அவரது அரசாங்கத்தின் கொள்கைகளையும் தெரிவிப்பார்.

இக் கூட்டத்தில் அவர் பல உலகத் தலைவர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்பின்னர் ஜப்பானின் ஒசாகாவிற்கு எக்ஸ்போ 2025 இல் கலந்து கொள்ளவும், இலங்கை தினத்தில் பங்கேற்கவும், நாட்டின் கலாசாரம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்தவும் நியூயோர்க்கிலிருந்து, ஜனாதிபதி செப்டம்பர் 27 ஆம் திகதி ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்வார்.

ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதியின் ஜப்பானுக்கான அரசு முறைப் பயணம் செப்டம்பர் 28 ஆம் திகதி ஆரம்பமாகும்.

Related posts

உணவு பொருட்களை பரிசோதிப்பதில் 2000 சுகாதார பரிசோதகர்கள்

நீர் கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

பொதுத் தேர்தல் – வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பம்