வகைப்படுத்தப்படாத

அமெரிக்க ஜனாதிபதி இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா குற்றச்சாட்டு

(UTV|AMERICA) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா முதலான நாடுகள் உலக காலநிலை தொடர்பில் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என  குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா முதலான நாடுகளில், சுத்தமான காற்று மற்றும் சுத்தமான தண்ணீர் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த 3 நாடுகளும், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் தூய்மை தொடர்பில் சிறந்த உணர்வைக் கொண்டிக்கவில்லை என்றும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

ஈரானில் கடுமையான நிலநடுக்கம்

Three killed, 5 injured in Wahamalugollewa accident

ஜனாதிபதி ரணிலை சந்தித்த பேருவளை சஹ்மி ஷஹீத்

editor