வகைப்படுத்தப்படாத

அமெரிக்க சட்ட மா அதிபர் பதவி நீக்கம்

(UTV|AMERICA)-ரஷ்யாவுடனான விவகாரங்களில் சட்டவாக்க அதிகாரிகளை தொடர்ச்சியாக விமர்த்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று(07) அந்நாட்டு சட்ட மாஅதிபர் ஜெஃப் செஸ்சன்ஸை பதவியை விட்டு நீக்கியுள்ளார்.

தற்போது செஸ்சன்ஸின் பதவி வெற்றிடத்திற்கு அவருடைய சிரேஸ்ஷ்ட அலுவலகர்களில் ஒருவரான மெதிவ் வைடேகர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஜெஃப் செஸ்சன்ஸின் இராஜினாமா கடிதத்தில், பதவி விலகுவதற்கான தீர்மானம் தனது சுய தனிப்பட்ட முடிவு அல்ல என்றும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

கைத்தொழில் உற்பத்திச் சுட்டென் 1.8 சதவீதத்தினால் அதிகரிப்பு

ஜப்பான் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி

தமிழக கடற்றொழிலாளர் ஒருவரின் மரணத்திற்கு கடற்படை பொறுப்பல்ல