சூடான செய்திகள் 1

´அபு இக்ரிமா´ கைது

(UTVNEWS | COLOMBO) -´அபு இக்ரிமா´ எனப்படும் மொஹமட் ரவைடீன் அமாஹமட் அலி அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற, தடை செய்யப்பட்டுள்ள ஜமாத்தே மில்லத் இப்ராஹிம் அமைப்பைச் சேர்ந்த ‘அபு இக்ரிமா’ எனும் புனைப் பெயர் கொண்ட ரபாய்தீன் முஹமத் அலி எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கம்பளை, வெலம்பொடயைச் சேர்ந்த குறித்த நபர் அம்பாறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரச புலனாய்வுத் தகவல் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இவ்வாறு பல கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு

15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

மஹிந்தவின் வீட்டுக்கு செல்கிறது CID…